ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள்: அனுரகுமார முன்னிலை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள்: அனுரகுமார முன்னிலை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டிஜிட்டல் தளம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவு அறிக்கை இன்று (01) வெளியிடப்பட்டுள்ளது.

முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 79 வீத ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 14 வீத மக்கள் ஆதரவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஐந்து வீத மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் 50,087 ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். அவர்களில் 87 வீதம் பேர் 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுளு்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்கான இந்த கருத்துக்கணிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதுடன், https://hela.page.link/vimasuma என்ற இணைப்பின் மூலம் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Oruvan
Oruvan
Oruvan
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )