
கனடா பாதுகாப்பு அமைச்சரான தமிழ்ப்பெண் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு கடும் கண்டனம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலுக்கு கனேடிய பாதுகாப்பு அமைச்சரான தமிழ்ப்பெண்மணியான அனிதா ஆனந்த் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.
அத்துடன் உக்ரைனுக்கு உதவுவது தொடர்பாக அந்நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ செனிக்கை அவர் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் அனிதா வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதலானது நம் அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச விதிகளின் மீதான தாக்குதலாகும்.
இந்தப் போர் இந்தோ-பசிபிக் உட்பட உலகம் முழுவதும் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
உக்ரைனுக்கான கனடாவின் தொடர்ச்சியான உதவிகள் தொடர்பாக உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சருடன் பேசினேன் என தெரிவித்துள்ளார்.