யார் சென்றாலும் பெரமுன வீழாது: ரணிலுக்கு ஆதரவளித்திருந்தால் சஜித்துடன் இணைந்திருப்பார்கள்

யார் சென்றாலும் பெரமுன வீழாது: ரணிலுக்கு ஆதரவளித்திருந்தால் சஜித்துடன் இணைந்திருப்பார்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து யார் வெளியேறினாலும் வாக்காளர்கள் கட்சியை விட்டு வெளியேறமாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 92 உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை, அவர்களில் சிலர் இன்னமும் பெரமுனவில் செயற்பட்டு வருகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு மஹிந்த ராஜபக்சவின் படத்துடன் வந்து மஹிந்தவை பிரதமராக்க கிராமம் தோறும் சென்று உள்ளூராட்சி மன்ற வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்கு பலம் மஹிந்த ராஜபக்சவிடம் இருப்பதால், மக்கள் கட்சியை விட்டு வெளியேற மாட்டார்கள் , அவ்வாறு வெளியேறியவர்கள் 200, 500 அல்லது 1000 வாக்குகளையே எடுத்துச் செல்வார்கள்

யார் சென்றாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழாது , மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு ஜே.வி.பி நாட்டை நிர்வகிக்கின்றது.

மக்கள் கட்சியை விட்டு வெளியேறியதற்கான காரணம் மக்களுக்குத் தெரியும் என்றும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்திருந்தால், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்திருப்பார்கள்.

15 இலட்சத்துக்கும் அதிகமான புதிய வாக்குகளை பெறக்கூடிய வேட்பாளரை பெரமுன நிறுத்தும்” என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )