வாழைச்சேனையில் மௌலவி கைது: ரீ 56 ரக துப்பாக்கிகள்,வாள் போன்றவை கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனையில் மௌலவி கைது: ரீ 56 ரக துப்பாக்கிகள்,வாள் போன்றவை கைப்பற்றப்பட்டன

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுறியா நகரில் மெளலவி ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு இரு ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் வாளுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை அரலகங்வில விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலன்னறுவை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே அதிரடிப்படை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி வருன ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய விசேட அதிரடிப் படையினர் நேற்றிரவு 10 மணியளவில் குறித்த மௌலவியின் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பின்போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரீ 56 ரக துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் 59, மெகசீன் 2, பைனோ 1, வாள் 1 ஆகியவை கைப்பற்றப்பட்டதுடன் மௌலவியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மௌலவியை மன்னம்பிட்டி விசேட அதிரடிப்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருவதுடன் இவரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )