ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு: தேசிய அமைப்பாளர் நம்பிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு: தேசிய அமைப்பாளர் நம்பிக்கை

இலங்கைத்தீவு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் ஆதரவு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபிக் தெரிவித்தார்.

தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் உயர்பீடம் இது வரையில் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை எனினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவார்கள் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் உள்ளிட்ட குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தற்போது இணைந்து செயற்பட்டு வருவதால் கட்சியின் உயர்பீடத்தின் ஆதரவு நிச்சயம் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபிக் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )