இலங்கையின் பழம்பெரும் நடிகை சுமனா அமரசிங்க காலமானார்

இலங்கையின் பழம்பெரும் நடிகை சுமனா அமரசிங்க காலமானார்

பழம்பெரும் சிங்கள நடிகை சுமனா அமரசிங்க தனது 73 ஆவது வயதில் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று இரவு காலமானார்.

இவர் ரூபி டி மெல் இயக்கிய பிபெனா குமுது படத்தின் மூலம் திரையுலகில் பிரவேசித்தார்.
பல முக்கிய திரைப் படங்களில் நடித்த சுமனா அமரசிங்க பல விருதுகளையும் வென்றுள்ளார். உதவி இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் இவர் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார் .

சுமனா அமரசிங்க 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டையில் பிறந்தார் மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ரோய் டி சில்வாவை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )