மூளையை உண்ணும் அமீபா எப்படி மனிதனை அடைகிறது?

மூளையை உண்ணும் அமீபா எப்படி மனிதனை அடைகிறது?

அண்மையில் மூளையை உண்ணும் அமீபா தொற்று பற்றி செய்திகள் வெளியாகின.

மூளையை உண்ணும் அமீபா என்றால் என்ன?

அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளை மற்றும் மூளையைச் சுற்றியிருக்கும் திசுக்களை பாதிப்படையச் செய்வது நெக்லரியா போலேரி எனப்படும் உயிரினம் ஆகும்.

இதனை மூளையை உண்ணும் அமீபா என்றும் கூறுவர்.

இது ஏரிகள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள், சூடான நீரூற்றுக்களில் காணப்படும்.

அதிலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் சுடு நீரிலும்,குளோரினில்லா நீச்சல் குளத்திலும் இது அதிகமாக காணப்படுகிறது.

இது எவ்வாறு மனிதனை அடைகிறது?

சூடான நீருள்ள குளங்கள், ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது மனிதனின் மூக்குத் துவாரங்களினூடாக இந்த அமீபா மனிதனின் மூளைக்குச் சென்று மூளையின் திசுக்களை வேகமாக உண்ணும்.

அறிகுறிகள் என்ன?

தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம், குழப்பம், கவனச்சிதறல், சமநிலை இழப்பு, வலிப்பு, கண் முன் மாய தோற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு சரியாக 12 நாட்களில் பாதிப்புக்குள்ளானவர் மரணிக்கிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )