
ஜேவிபி விரைவில் சரிந்து விடும்: ரணிலுக்கே எனது ஆதரவு; பிரசன்ன ரணதுங்க
ஜேவிபி எனும் தேசிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி விரைவில் சரிந்து விடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, தானும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.
நான் இன்னும் மஹிந்தவுடனே உள்ளேன். நான் மாத்திரமே அவரது தோல்வியிலும் அவருடன் இருந்தேன். கட்சி என்ன தீர்மானம் எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மொட்டுக் கட்சியில் வேட்பாளர் யாரும் இல்லை என்பதை நான் அன்றும் கூறினேன் இன்றும் கூறுகிறேன். எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது சகோதர ஊடகமான “நெத் நியூஸ்” (Neth news) இல் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடாத்துவது நன்மையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் முன்வைத்த விமர்சனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு,
”அவர் அரசாங்கத்தின் நேரத்திலிருந்து பேசினாலும் கூட அவர் தனது தனிப்பட்ட கருத்துக்களையே முன்வைத்தார்” என பதிலளித்தார்.
பசில் ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எந்த மனக் கசிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.