மொட்டின் பிரதமர் வேட்பாளராக ரணில்?

மொட்டின் பிரதமர் வேட்பாளராக ரணில்?

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ச தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுஜன பெரமுன வேட்பாளராக தம்மிக்க பெரேரா நிறுத்தப்படுவாரா அல்லது ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பாரா என்பது குறித்து கட்சிக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஸ்ரீமஹா போதி மற்றும் ருவன்வெலிசாயவை வழிபட்டு அனுராதபுரத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தேர்தலை இலக்காகக் கொண்டு பல்வேறு வியூகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் கடந்த வாரம் பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா முன்வைக்கப்படுவாரா அல்லது ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பாரா என்பது குறித்து கட்சிக்குள் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கு தம்மிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததுடன், தனக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலும், கட்சிக்குள் இடம்பெற்ற கலந்துரையாடல்களிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கோ அல்லது ரணில் விக்ரமசிங்கவுக்கோ வெற்றி பெற முடியாது என பசில் ராஜபக்ச தெளிவாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அல்லது தம்மிக்க பெரேரா ஆகியோரில் ஒருவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவதன் மூலம் பொதுஜன பெரமுன பிளவுபடுவதை தவிர்க்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க அல்லது தம்மிக்க பெரேரா ஆகியோரை ஜனாதிபதி – பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான யோசனை பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், புதிய முகமாக தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராகவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தி, அரசியலமைப்பின் ஊடாக ரணிலுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் யோசனை முன்வைக்கப்படும் என பலரிடையே கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்குவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொதுஜன பெரமுன இந்தத் தீர்மானத்தை எடுத்தால் கட்சிக்குள் பிளவைத் தவிர்த்து முன்னேற வாய்ப்புகள் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட விரும்புவாரா என்பது குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )