
இலங்கைக்கான பயணிகள் படகுச் செலவு இலங்கையின் சுமையை இந்தியா சுமக்கும்
தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் படகுச் சேவைக்காக ஒரு வருட காலத்திற்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் இயக்கச் செலவுக்காக மாதத்திற்கு 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவை இந்திய அரசாங்கம் ஏற்க முடிவு செய்துள்ளது.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஒப் இந்தியா (SCI) மூலம் அக்டோபர் 2023 இல் தொடங்கப்பட்ட காங்கேசன்துறைக்கான பயணிகள் படகுச் சேவை, தற்காலிகமாக எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் தொடங்கும். இது, இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் SCI ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனமான IndSri ஃபெரி சேவீசஸ் மூலம் இயக்கப்படும்.
இந்தச் சேவையை குறைந்த கட்டணத்திலும், பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றும் வகையிலும், இந்திய அரசாங்கம் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவை ஒரு வருடத்திற்கு, மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் ஏற்க முடிவு செய்துள்ளது.
அதேபோன்று, இலங்கையிலிருந்து பயணிகள் கப்பல்கள் மற்றும் கப்பல்கள் மூலம் புறப்படும் பயணிகளிடமிருந்து தற்போது அறவிடப்படும் விலகல் வரியை இலங்கை அரசாங்க குறைத்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்காக காங்கேசன்துறை அரசுக்கு இந்திய அரசாங்கம் 63.65 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானிய உதவியாக வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

