புங்குடுதீவில் இனம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள்; இன்று அகழ்வுப்பணி முன்னெடுப்பு

புங்குடுதீவில் இனம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள்; இன்று அகழ்வுப்பணி முன்னெடுப்பு

புங்குடுதீவில் இம்மாதம் இனம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணி இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் இடம்பெறவுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;

அண்மையில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் வைத்தியசாலைக்கு வன்மையாக மனித எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் ஆரம்பித்திருந்தனர்.

தொடர்ந்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் காலை 8: 30 மணி முதல் அகழ்வுபணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அகழ்வு பணிகளின்போது ஊர்காவற்துறை நீதவான் ,
சட்டவைத்திய அதிகாரி ,நிலஅளவைத் திணைக்களத்தினர், ஊர்காவற்துறை பொலிசார், வேலணை பிரதேச செயலாளர்

உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )