தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அலட்சியப் போக்கை பின்பற்றும் கம்பனிகள்; போராட்டத்திற்கு தயாராகும் இ.தொ.கா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அலட்சியப் போக்கை பின்பற்றும் கம்பனிகள்; போராட்டத்திற்கு தயாராகும் இ.தொ.கா

சம்பள உயர்விற்கு தீர்வு கூட்டு ஒப்பந்தத்தில் முடிவு ஏற்படாததால், ஜனநாயக முறையில் இரு தரப்பிற்கும் நடுநிலையான தொழில் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனிகள் அலட்சிய போக்கை பின்பற்றுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டான் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு சௌமியபவனில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான்,

நேற்று முன் தினம் கம்பனிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் இ.தொ.கா ஈடுபடுவதாக தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில்,இது தொடர்பாக இ.தொ.காவின் உயர்மட்ட குழு இன்று கூடி தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய உள்ளது. இக்குழுவின் பரிந்துரைக்கு அமைய கம்பனிக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட இ.தொ.கா தீர்மானம் எடுத்துள்ளது.

இ.தொ.கா மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இ.தொ.கா எதற்காக 2000 ரூபா , 3000 ரூபா ,4000 ரூபா என சம்பள உயர்வு கேட்காமல் வெறும் 1700 ரூபா உயர்வு கோரி கோரிக்கை முன்வைத்துள்ளது என்று, சம்பள பேச்சுவார்த்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று சிலருக்கு தெரியாது. கடையில் போய் அரிசி பருப்பு வாங்குவது போன்று சம்பள பேச்சுவார்த்தை நடத்த முடியாது. ஒரு சம்பள உயர்வு பேசப்படும் பொழுது இன்று காணப்படும் தேயிலையின் உற்பத்தி செலவு, கடந்த 2 வருடமாக சந்தைகளில் தேயிலையின் ஏள விலை, தற்போதைய ஏள விலை என்பவற்றை ஆராய்தல், வெளிநாடு மற்றும் உள்நாடு தேயிலையின் சந்தை விலை, அடுத்த 2 வருடங்களுக்கான உள்நாடு மற்றும் வெளிநாடு தேயிலை உற்பத்தி, தேயிலை அருந்துபவர்களின் விகிதாசாரம், நாட்டில் தற்போது காணப்படும் டாலர் விலையின் விகிதாசாரம், பங்கு சாந்தியின் நிலவரம், மத்திய வங்கியின் கணக்கீட்டின்படி ஒரு நபருக்கான வாழ்வாதர செலவின் அடிப்படை தொகை,வாழ்வாதார செலவு என்பவற்றை ஒப்பிட்டு கணக்காய்வு செய்து, ஒரு நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுப்பதே ஒரு முறையான சம்பள பேச்சுவார்த்தை. இது தொடர்பாக எந்த வித ஆய்வும் இன்றி கடையில் அரிசி பருப்பு வாங்குவது போல 2000,3000,4000 கொடுங்கள் என்று கூறினால் தொழில் அமைச்சு அதை நிராகரித்து விடும். சம்பள பேச்சுவார்த்தைக்கான பொறிமுறையை அடிப்படையாக கொண்டு தான், 1700 சம்பள உயர்வை இ.தொ.கா முன்வைத்துள்ளது.

சம்பள பேச்சுவார்த்தையின் போது எமது கோரிக்கை சம்பள நிர்ணய சபைக்கு நியாயமானதாக இருந்தால் மாத்திரமே, தொழில் அமைச்சின் ஊடாக அதை நடைமுறைபடுத்த அனுமதி வழங்கப்படும்.

இ.தொ.கா முன்வைத்த தொகையை தாண்டி தோட்ட தொழிலாளர்களுக்கு வேறு எவரும் அதிக தொகையை பெற்று கொடுப்பார்கள் என்றால் இ.தொ.கா அதை என்றும் முழுமையாக வரவேற்கும்.

இ.தொ.காவின் ஆய்வின் கணக்கீட்டின் படி இ.தொ.கா தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை கோரியுள்ளது.

மேலும் பல அரசியல் வாதிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசை குறைகூறி கொண்டிருக்கின்றனர் அது எனக்கு வியப்பாகவுள்ளது. சம்பள பேச்சுவார்த்தைக்கு வருகைத்தராத கம்பனிகளை குறைக்கூறாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரசை குறைக்கூறும் பொழுது, கம்பனி மீது மக்களுக்கு வைத்து இருக்கும் வெறுப்பை திசை திருப்ப கம்பனிகளுக்கு கைகூலியாக இவர்கள் செயற்படுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )