
ரணிலுக்கு ஆதரவாக 80 கட்சிகள்,அமைப்புகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு இணங்கியுள்ளதாகவும் நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்க ஒரு தேசிய பொக்கிசம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் மீதான உணர்வு தற்போது நீர்த்துப் போயுள்ளதாகவும் நாட்டில் பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டார்.
நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு தேசிய பொக்கிசம் எனவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதே அவரது நோக்கமாகும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட இலங்கையில் எண்பதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஏற்கனவே இணைந்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் சில குழுக்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் சில குழுக்கள் தங்கள் கட்சி மற்றும் அமைப்புகளின் அடையாளத்தை பாதுகாத்துக் கொண்டு ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.