எரிபொருள் விலை அதிகரிப்பு வெறிச்சோடியது கொழும்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு வெறிச்சோடியது கொழும்பு

எரிபொருள்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொழும்பு நகரம் வெறிச்சோடி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கொழும்பு நகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பெட்ரோல் நிரப்பு நிலையம் முன்பாக காணப்பட்ட நீண்ட வரிசைகளும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை இல்லை எனவும், எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால் எரிபொருள் கொள்வனவு குறைந்துள்ளதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மருதானை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் குறைந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை உயர்வால், பலர் தங்கள் வீடுகளில் கார்களை நிறுத்தி பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )