
கச்சதீவு விவகாரம் எதுவும் தெரியாது என்கிறது அரசு
கச்சதீவு விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கச்சத்தீவு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த கருத்து குறித்து இலங்கை அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க இலையே அமைச்சர் பந்தலகுனவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அதன் போது அமைச்சர் மேலும் கூறுகையில்,
“அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது அமைச்சரவையில் அந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவும் இல்லை அதனால் எனக்கு இந்த விடயம் தொடர்பில் கருத்து கூற முடியாது” என்றார்.