
மைத்திரிபாலவின் கருத்து மற்றுமொரு அரசியல் சதி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மைத்திரிபால சிறிசேனவின் கருத்து மற்றுமொரு அரசியல் சதி என சந்தேகிக்கப்படுவதாகவும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்து வருடங்களாக இந்தச் சம்பவத்தை மறைத்து வருவதாகவும் தேசிய மக்கள் படை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணி உபுல் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் இது அதிகார வெறி மற்றும் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளின் சில அரசியல் சதியின் விளைவு என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிறிஸ்தவ வழிபாட்டாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மார்ச் 22 ஆம் திகதி கண்டியில் அறிக்கையொன்றை வெளியிட்டார். சட்டமா அதிபர், நீதித்துறை அமைப்பு, விசாரணை அமைப்புகள் மற்றும் பொலிஸார் இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
குற்றவியல் சட்டத்தின் 174வது பிரிவின் கீழ், இது மிகவும் தெளிவாக உள்ளது. ஒரு பொது ஊழியராக, ஒரு பொது ஊழியருக்கு ஒரு விடயத்தைப் பற்றிய தகவலை அறிவிக்க அல்லது வழங்குவதற்கு சட்டப்பூர்வமாகக் கட்டுப்பட்ட ஒரு நபர், அத்தகைய அறிவிப்பை அல்லது தகவலை சட்டத்தின்படி மற்றும் நேரத்தில் வழங்கத் தவறினால் அவர் தண்டிக்கப்படுவார். குற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் குற்றவாளியை கைது செய்ய தடையாக இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என குற்றவியல் சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக இவ்வாறானதொரு பெரும் அவலத்தை அரசியல் இலாபங்களுக்காக இந்த நாட்டு மக்கள் பயன்படுத்துவதற்கு இனியும் இடமளிக்கக் கூடாது என்பதையே நாம் குறிப்பிடுகின்றோம். நீதி பரிபாலனத்தில் நீதித்துறையை ஆதரிக்கும் ஒரு சமூகமாக வழக்கறிஞர்களாகிய நாங்கள் இந்தப் பிரச்சினையை ஒரு பாரதூரமான விடயமாகப் பார்க்கிறோம்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் ஐந்து வருடங்களாக இந்தச் சம்பவத்தை மறைத்து வருகின்றனர். இதை நாகரீக சமுதாயம் கண்டிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக இன்று வரை தெளிவான விசாரணை நடத்தப்படவில்லை. இவ்விடயத்தில் தலையிட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.