
பெண்ணே …
“அரிது அரிது பெண்ணாய்
பிறத்தல் அரிது” எனும் புதுமொழி
இன்று மெய்ப்பிக்கப்பிடுகிறதுk
பெண்ணே உன்னால் …
உன்னை தோட்கடிக்கும்
பல புள்ளிகளை கொண்டு
உன்னை
சரி செய்து கொள்….
அங்கே தொடங்கட்டும்
உன் வெற்றி பயணம்…
கொடுமைகள் தந்து
மனதளவில் உன்னை கொன்றுவிட்ட
ஈனப்பிறவிகளை மன்னித்து விடு…
அவர்கள் மன்னிப்புக்கு உறியவர்கள்
என்பதற்காக அல்ல…
மன்னிக்கும் மனம்
பெண்ணுக்கே உரியது
என்பதற்காக…
தட்டிக்கேட்பவர் வெளியில்…
தட்டித்தட்டி கேட்பவர் சபையில்
இதுதான் உலகம்…
தைரியத்தை சட்டைப்பைக்குள்
வைத்து விட்டு நீதி தேடியவர்கள்
இன்னும் நீதிமன்ற வாசலில்…
துணிந்து எழுந்து
முன்னே செல்…
உன் முயற்சிக்கு
சான்றாய் நீயே
முளைப்பாய்….
உன் நிம்மதி
நிலைக்குலையும்
தருணம்
நீ நிதானத்தை
நிரந்தரமாக்கிகொள்
ஏனென்றால் உன் குழப்பத்தில்
குளிர் காயும் கூட்டம்
இங்கு ஏராளம்…
கைப்பிரம்பாய் உன்
பேனையை கூர்மை செய்..
எழுத்துக்கள் கொண்டு
தலையெழுத்தை செதுக்கிகொள்
கடும் விஷமாய்
பார்வையை பரிசளி
ஆலகால விஷத்தை
அவ்வப்போது
அள்ளித் தெளித்துவிடு
உனை ஆட்டிவைக்கும்
கூட்டம் தனில்..
உன்னை சுற்றி விலங்கினமே
வாழ்கிறது…
அவற்றுல் நீயும் மாறி விடு
அன்னம் போல் அவதரித்து விடு..
கழுகை போல் பாடம் கற்றுக் கொள்…
மனிதனைப் போல் மட்டும் வாழ
எண்ணாதே…
அது குணத்தாலே
அழிந்து வரும் உயிரினம்….
உயர உயர பறந்து செல்
உனக்கான விதியை
நீயே எழுதிக்கொள்…
சிங்கத்தை போல் தனித்திரு..
சிறுத்தையை போல் வேகம் கொள்
சிரமத்தை தாண்டி எழுந்து நில்…
தடைகளை தகர்த்து வெளியெ வா…
உயிர் போகும் வலிகள் தந்து
உலுக்கிவிட்டவர்கள்
நீ வீழ்வதை
பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்…
இவ்வளவும் தாங்கி நீ வாழ்கிறாய்
என்றால் உன்னால் சாதிக்கப்பட
வேண்டிய ஒன்று இன்னும் இருக்கிறது…
அதை நோக்கி அடி எடுத்து வை..
பீனிக்ஸ் பறவை போல் புதுப்பிறவி எடு…
புலரும் புது விடியல் உனக்காக…
அன்புடன்
-மாலினிமோகன்-