
பொலிஸாரின் வழக்கு பொய் என நிரூபணம்
வவுனியா வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலைசெய்யப்பட்டமை பொலிஸார் தொடுத்த வழக்கு பொய் என்பதை நிரூபித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரையும் விடுவிக்கக்கோரியும் . பொலிஸாரின் அராஜகத்தை நிறுத்தகோரியும் கோஷமிட்டும் சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் தமிழ் எம்.பி.க்கள் சபை நடுவே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் போராட்டத்தில் கலந்துகொண்டு வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ வழங்கிய நிலையில் ஆர்ப்பாட்டம் முற்றுப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து வவுனியா வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விருதை செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வந்ததையடுத்து நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வவுனியா வெடுக்குநாறிமலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலைசெய்யப்பட்டமை பொலிஸார் தொடுத்த வழக்கு பொய் என்பதை நிரூபித்துள்ளதாகவும் கூறினார்.