நாட்டில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி

நாட்டில் தமிழருக்கு ஒரு நீதி சிங்களவருக்கு ஒரு நீதி

நாட்டில் தமிழருக்கு ஒரு நீதியும், சிங்களவருக்கு ஒரு நீதியுமே இருக்கின்றது என்றும் இதுவே பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

வவுனியா வெடுக்குநாறிமலை, ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி பூஜையில் ஈடுபட்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சபையில் உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்போது சாணக்கியன் எம்.பி மேலும் கூறுகையில்,

தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடியால் தமிழர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். முறையான விசாரணையின் பின்னரே அவர்களை விடுதலை செய்ய முடியும் என்று நீதி அமைச்சர் கூறுகின்றார். ஆனால் இதே தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான குருந்தூர்மலை போன்ற இடத்தில் பௌத்த பிக்குகள் நடந்துகொண்டமைக்கு எதிராக தொல்பொருள் அமைச்சரால் இதுவரையில் எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

ஆகவே இந்த நாட்டில் தமிழருக்கு ஒருநீதி, சிங்களவருக்கு ஒருநீதி என்றே இருக்கின்றது. இதுவே நாட்டின் அடிப்படை பிரச்சினையாகும். விசாரணை செய்துதான் விடுதலை செய்ய முடியுமென்றால், ஏன் இன்னும் பிக்குகளை கைது செய்யவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )