
இந்தியாவுக்கு எதிர்ப்பு சீனாவுடன் சந்திப்பு
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச சீன தூதரகத்தின் கொன்சியூலர் ஷேன் எக்ஸியூனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணி கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய எதிர்ப்பு செயற்பாடுகளில் தீவிரம் காட்டி வரும் நிலையிலேயே வீரவன்ச சீன தூதரக அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை உள்ளிட்டவை தொடர்பிலும் இந்தியாவின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் தொடர்பிலும் அமைக் காலங்களில் பல்வேறு கடும் விமர்சனங்களை விமல் வீரவன்ச வெளியிட்டு வருகின்றார்.
இவ்வாறான நிலைமையில் தனது இந்திய எதிர்ப்பை மேலும் வெளிப்படுத்தும் வகையில் அவரின் சீன தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பு இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES செய்திகள்