
வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் வீட்டில் சாந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி
வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டின் முன்னால் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மறைந்த சாந்தன் பூதவுடலின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை வல்வெட்டித்துறைக்குச் சென்றபோது ஆலடியில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணியிலும் சிறிது நேரம் தரித்து வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது சாந்தனின் புகழுடலுக்கு சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் போர்க்கப்பட்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக உடுப்பிட்டி – இலக்கணாவத்தையில் உள்ள சாந்தனின் சகோதரியி ன் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.
இறுதி ஊர்வலம் அறிவகம் சனசமுக நிலையம் ஊடாக தர்மகுலசிங்கம் சனசமுக நிலையம் ஊடாக வீரகத்தி விநாயகர் சனசமூகநிலையம் ஊடாக நாவலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஊடாக பயணித்து பொலிகண்டி ஊடாகச் சென்று எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பூதவுடல் விதைக்கப்பட்டது.