இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக இலங்கை கடல் எல்லையில் போராட்டம்; கறுப்புக்கொடிகளுடன் அணி வகுத்த படகுகள்

இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக இலங்கை கடல் எல்லையில் போராட்டம்; கறுப்புக்கொடிகளுடன் அணி வகுத்த படகுகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்களால் கறுப்புக் கொடி ஏந்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழக மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் இலங்கையின் கடல் வளமும் சூறையாடப்பட்டதாக தெரிவித்து கடத் தொழிலாளர்கள் இக்கறுப்புக் கொடி போராட்டத்தினை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் – தீவகத்தின் வேலணை,மண்டைதீவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மீனவர்கள் படகுகளில் புறப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோன்று வடமராட்சியின் பருத்தித்துறை தொடக்கம் வடமராட்சி கிழக்கு வரையான கடத் தொழிலாளர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்ட கறுப்புக்கொடி கட்டிய படகுகளில் ஆழ் கடலை நோக்கி சென்று அங்கு கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அழிக்காதே அழிக்காதே எமது கடல்வளத்தை அழிக்காதே,அடிக்காதே அடிக்காதே எமது வயிற்றில் அடிக்காதே,தொப்புள் கொடி உறவே இது நியாயமா? போன்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

காலை ஒன்பது முப்பது அளவில் ஆரம்பமான போராட்டமானது மதியம் வரை நடைபெற்றது.இக் கறுப்புக் கொடி போராட்டம் இடம்பெற்றதன் காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இதேவேளை கடற்றொழிலாளர்களின் போராட்டம் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெறக்கூடாது என இலங்கை கடற்படை எச்சரிக்கை விடுத்திருந்தது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )