
புதிய பொலிஸ் மா அதிபரினால் சட்டவாட்சிக்கு பாரிய அச்சுறுத்தல்
பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவாட்சி கோட்பாட்டுக்கு பாரியதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர்,
புதிய பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது .மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவாட்சி கோட்பாட்டுக்கு பாரியதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பொலிஸ்மா அதிபராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் அரகலய போராட்டத்தின் போது எவ்வாறு செயற்பட்டார் என்பதை முழு நாடும் நன்கு அறியும் என்றார்.