
இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல்; அடுத்த வருடம் பொதுத் தேர்தல்
உரிய காலப் பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும்,
தற்போதைய காலவரையறைக்கு அமைவாக அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்குத் தேவையான நிதி 2025 வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக
ஒதுக்கப்படும்.
தேர்தலை நடத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பு என்றும் தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக் குழுவுடன் இணைந்துச் செயற்படும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.