தமிழ் மக்களுக்கு எதிரான ரணில் அரசின் இரட்டை வேடத்தை  ஜெனீவாவில்  ழுமையாக அம்பலப்படுத்துவோம்

தமிழ் மக்களுக்கு எதிரான ரணில் அரசின் இரட்டை வேடத்தை ஜெனீவாவில் ழுமையாக அம்பலப்படுத்துவோம்

தமிழ் மக்கள் தொடர்பான ரணில் அரசின் இந்த இரட்டை வேடத்தை வருகின்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்துவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாள் உள்ளிட்டவர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மாவீரர் வாரத்தில் கைது செய்யப்பட்ட ஏனைய அரசியல் கைதிகள் மற்றும் சிறையில் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன், ஜனநாயக போராளி அமைப்பின் நகுலேஸ் ஆகியோரை சந்தித்தேன்

நகுலேஸின் வழக்கு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர்கள் சார்ந்த முடிவு எட்டப்பட்டுள்ளது அந்தவகையில் அடுத்து வழக்கு தவனைக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது தொடர்பாக வெளிப்படுத்தப்படும் அதேவேளை எமது கட்சி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் தனுஜனை கடந்த வாரம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை செய்து அதனை அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரமுடியாத விடயங்கள் அந்த பி அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன அந்த சட்டத்தின் கீழே குற்றங்களாக கருதமுடியாத காரணங்களை வைத்து அந்த வழக்குகளை தொடரமுடியாது அவ்வாறான நிலையில் இரண்டு மாதங்களாக சிறைச்சாலையில் அடைத்துவைத்திருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல்.

இலங்கை அரசினுடைய உண்மையான இனவாத நிகழ்சி நிரலை இரட்டை வேடத்தை அதாவது இறந்தவர்களை நினைவு கூரலாம் என உலகத்திற்கு சொல்லி நல்ல பிள்ளைக்கு நடித்துக் கொண்டு மறுபக்கம் நினைவு கூர்ந்தவர்களை கைது செய்து அவர்களை பழிவாங்கும் நோக்கில் செயற்படுவதை உலகத்திற்கு தெரியப்படுத்துவோம் . அரசின் இந்த இரட்டை வேடத்தை வருகின்ற மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்தி அதனை நேரடியாக பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 27 ம் திகதி நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முரணாக கைது செய்தமை தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அனைத்துலக மனித உரிமை ஆணைக் குழுவிடம் தெரியப்படுத்தியுள்ளோம்

அதேவேளை மார்ச் மாதம் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது இடம்பெறும் அடக்குமுறை மற்றும் நில ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு அநீதிகளுக்கு எதிராகவும் இங்கு தமிழருக்கு எதிராக நடாத்தும் அழிப்புக்கள் தொடர்பாகவும் தற்போது புதிதாக கொண்டுவரவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்டம் , மற்றும் சமூக ஊடகங்களுக்கு எதரான சட்டங்கள் தொடர்பாக அந்தந்த அமர்வுகளில் அம்பலப்படுத்தவுள்ளோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )