இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி தமிழக அரசு எமக்கு உதவ வேண்டும்; செல்வம் கோரிக்கை

இலங்கையில் கொடுங்கோல் ஆட்சி தமிழக அரசு எமக்கு உதவ வேண்டும்; செல்வம் கோரிக்கை

இலங்கை அரசின் கொடுங்கோல் ஆட்சியை முறியடிக்கின்ற அகிம்சை போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் தமிழ்நாட்டில் இடம்பெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என நம்புவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு, அகதிகளாக தமிழ்நாட்டை சென்றடைந்த இலங்கை தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள உதவிகள் தொடர்பிலும் இதன்போது நினைவுகூர்ந்தார்.
இதேவேளை இங்கு உரையாற்றிய சாணக்கியன் எம்.பி.,

1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈழத்தமிழர்கள் இங்கு வந்து எமது நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் கேட்டிருந்தார்கள் அவர்களுக்கு இனத்தின் விடுதலைக்காக வழங்கப்பட்டது.

அதேபோல் நானும் ஓர் ஆயுதத்தை கேட்கின்றேன் அது பொருளாதாரம் என்னும் ஆயுதம். எமது நாட்டின் ஜனாதிபதி கூட தான் இலங்கையை கட்டி எழுப்புவதற்க்கான திட்டத்தை தமிழ் நாட்டில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை வைத்துத்தான் தான் திட்டத்தினை வைத்துள்ளதாக சொல்கின்றார்.

அவ்வாறான ஓர் நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் நாம், தமிழக முதல்வரிடமும் அரசியல் பிரமுகர்களிடமும் கேட்பது உங்கள் சிறந்த ஆயுதமான பொருளாதரத்தை வைத்துக்கொண்டு ஈழத் தமிழர்களான எங்களுக்கு நிம்மதியான சிறந்த எதிர்காலத்தையும் எமது மக்களின் அபிலாசைகளை எமது உரிமையை அமைத்துத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். என கருத்து தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )