
திருத்திய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இவ்வாரம் சபையில்
திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பலதரப்பினராலும் இராஜதந்திர சமூகத்தினராலும் முன்வைக்கப்பட்ட கரிசனைகளிற்கு ஏற்ப பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் திருத்தப்பட்டுள்ளது.எனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த சட்டமூலத்திற்கு எதிராக யாரவது விரும்பினால் நீதிமன்றம் செல்ல முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படாத பல வித்தியாசமான அம்சங்கள் புதியசட்ட மூலத்தில் இடம்பெற்றுள்ளன.புதிய சட்டமூலத்தில் பாதுகாப்பு அமைச்சருக்கு தடுத்துவைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை .அந்த அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது அவர் பொலிஸ்மா அதிபரின் பரிந்துரையின் பேரில் இந்த உத்தரவை பிறப்பிப்பார் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வழங்கப்படுகின்ற வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது . பயங்கரவாதம் என்பதற்கான வரையறையையும புதிய சட்ட மூலம் கொண்டிருக்கும் பயங்கரவாதம் என்பதற்கான சர்வதேச அளவிலான வரைவிலக்கணம் இல்லாததால் நாங்கள் எங்கள் வரைவிலக்கணத்தை முன்வைக்கின்றோம் .
சந்தேகநபரை தடுத்துவைக்ககூடிய நாட்கள் தற்போது 90 ஆக காணப்படுகின்றன இதனை 30 நாட்களிற்கு புதிய சட்ட மூலம் குறைக்கின்றது எனவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.

