ஜனாதிபதித் தேர்தலில் திலித் ஜயவீர போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் திலித் ஜயவீர போட்டி

ஜனாதிபதித் தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவரான பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல தொழிலதிபர் திலித் ஜயவீர, 2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

‘தெரண’ தொலைக்காட்சியை நடத்தி வரும் ‘பவர்ஹவுஸ்’ நிறுவனம், ‘அருண’ நாளிதழை நடத்தி வரும் ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ உள்ளிட்ட 24 நிறுவனங்களில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.

முழு நேர அரசியலில் பிரவேசித்துள்ள திலித் ஜயவீர எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘மவ்பிம ஜனதா கட்சியின்’ தலைவராக போட்டியிட தீர்மானித்துள்ளார்.

அதற்கான பிரச்சாரங்களை அவர் நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ள பின்புலத்திலேயே தாம் வகித்த அனைத்து தலைவர் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )