பலமாக இருக்கிறேன் களத்தில் இறங்குவேன்

பலமாக இருக்கிறேன் களத்தில் இறங்குவேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை பலம் தன்னிடம் இருப்பதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை தன்னிடம் இருப்பதாகவும் அவர்கள் கோரிக்கை விடுத்தால் தானே ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை குருநாகல் மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து வெற்றிடமாகவுள்ள குருநாகல் மாவட்ட தலைமைக்கு முன்னாள் மாகாண சபை சுகாதார அமைச்சர் லக்ஸ்மன் வெதருவவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிங்கிரியில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து எதிர்கால வேலைகள் குறித்து கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டாலும், கட்சியில் உள்ள பலர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )