தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதி ரணிலையும் விரட்டியடிப்போம்

தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதி ரணிலையும் விரட்டியடிப்போம்

குறிப்பிட்ட காலத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் கோத்தாபய ராஜபக்‌ஷவை போன்று தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் விரட்டியடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்று நம்புகின்றேன். எவ்வாறாயினும் தேர்தலை நடத்தாவிட்டால், இலட்சக்கணக்கில் மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து தேர்தலை நடத்தாத நாட்டின் தலைவரை கோத்தாபய போன்று விரட்டியடிக்க நடவடிக்கை எடுப்போம் என்பதனை நான் கூறுகின்றோம். அதற்கு உதவியவர்களையும் விரட்டிக்க வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )