உலகத் தமிழர் பேரவையினர் ‘இமாலயத் துரோகிகள்’ என படங்கள் மீது முட்டை வீச்சு

உலகத் தமிழர் பேரவையினர் ‘இமாலயத் துரோகிகள்’ என படங்கள் மீது முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான நேற்று திங்கட்கிழமை, உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் ‘இமாலயத் துரோகிகள்’ எனவும் தெரிவித்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து அவர்கள் ,அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த, தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார்,

நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது.

தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

எமது மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், நல்லிணக்கம் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்பை உள்ளடக்கியிருப்பது முக்கியமானது. இது, அவர்கள் சிங்களவர்களுடன் வாழ விரும்புகின்றார்களா அல்லது தமது சொந்த இறையாண்மையை நிலைநாட்ட விரும்புகின்றார்களா என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த வாக்கெடுப்பில் வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )