மொட்டு கட்சியின் நான்கு ஜனாதிபதி வேட்பாளர்கள்: தம்மிக்க பெரேராவின் பெயரும் பரிசீலனை

மொட்டு கட்சியின் நான்கு ஜனாதிபதி வேட்பாளர்கள்: தம்மிக்க பெரேராவின் பெயரும் பரிசீலனை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிருவதற்கான வேட்பாளர்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பரிசீலித்து வருகிறது.

கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமது கட்சியில் நான்கு வேட்பாளர்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நால்வரில் வர்த்தகர் தம்மிக்க பெரேராவும் அடங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )