மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு

மட்டக்களப்பிலும் பொலிஸ் பதிவு

மட்டக்களப்பில் பொலிசார் மீண்டும் குடியிருப்பாளர்களின் விபரங்களை கோரிய விண்ணப்பப் படிவம் ஒன்றை வீடு வீடாக வழங்கி தகவல் சேகரித்து வருகின்றனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திலுள்ள பிரதேசங்களில் உள்ள வீடு வீடாக பொலிசார் முழுவிபரங்களும் அடங்கிய விண்ணப்பபடிவம் ஒன்றை வழங்கி தகவல்களை பெறும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் தங்கியிருப்பவர்களின் விபரங்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பபடிவம் 1865 ஆம் ஆண்டின் 16 ம் இலக்க பொலிஸ் கட்டளைச்சட்டத்தின் 75 வது பிரிவிற்கு அமைவாக செயல்படும் ஆணை எனும் தலைப்பில் விண்ணப்ப படிவம் ஒன்றை வழங்கி பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை கொழும்பில் தமிழ் மக்களை மட்டும் இலக்காகக் கொண்டு தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்படுகின்றன. பொலிஸார் தமக்குரிய வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்.அதனை விடுத்து கிராம சேகவர் வேலையை பார்க்க கூடாது. எனவே தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட தகவல் திரட்டல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான மனோ கணேசன் பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )