யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி

யாழ்ப்பாணம் வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாளான இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

பிரதான ஈகைச் சுடரினை கடற்கரும்புலி மாவீரர் தமிழினியின் தந்தையார் முத்துலிங்கம் சிவப்பிரகாசம் ஏற்றிவைத்தாா். 

அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள்,  உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு போரில் உயிர் நீர்த்த ஏனையவர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )