மகிந்தவைக் கொல்ல சிப்பாய் முயற்சியா?

மகிந்தவைக் கொல்ல சிப்பாய் முயற்சியா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் கொழும்பில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக சென்று, மஹிந்தவை கொலை செய்யப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கிரிவெல பகுதியை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )