
முன்னோக்கி வா!
என் இனிய
பட்டாம்பூச்சியே!
எத்தனை சோகம் சுமந்தாய்?
அத்தனை சுமைகளும் தாண்டி
வாழ்வின்
எல்லை வரை பறக்கலாம்!
சிறையை உடைத்து
வெளியில் வா!
நீ தாண்டிய
மலையளவு
தடைகளை விட
இது ஒன்றும் பெரிதல்ல!
மனிதமற்ற மானிடரின்
வெறித்தனமான செயல்…
பட்டுப்போன்ற
உன் மனதை
சுடு சொற்கள்எனும்
கருங்கல்லில்
உறவு எனும்
நூல் கொண்டு
கட்டியுள்ளனர்!
மறவாதே!!
உன் எண்ணங்கள்…
உன் சிந்தனை…
உயர்வானது.
உன் வாழ்க்கைக்கு
ஓர்
அர்த்தமுண்டு.
சிறையை உடைத்து
பறக்க
உன்னால் முடியும்.
பறந்து வா!!
உளி கொண்டு
செதுக்கச் செதுக்கவே
சிற்பம்உருவாகும்.
சிறைகளை உடை!
தடைகளைத் தகர்!
சுதந்திர காற்றை
சுவாசிக்க
உன்னுடைய உந்துதல்
அவசியம்.
நீ நீயாக இரு!
அத்தனை தடைகளும்
கால் தூசியாகும்!!
-அம்மு.
CATEGORIES இலக்கியம்