முள்ளிவாய்க்காலின் அழியாத            நினைவுச் சுவடுகளுடன்….

முள்ளிவாய்க்காலின் அழியாத நினைவுச் சுவடுகளுடன்….

       

பதின்மூன்று ஆண்டுகள்….
ஓடிக் கடந்தன…!!
பத்திரமாய்
பூட்டி வைத்திருக்கும்
இந்த நினைவுகளை
ஓட்டிக் கொண்டு
தினமும்
ஏதோதோ நிகழ்வுகளை
மனம்
படமாக ஓட்டிச் செல்கிறது..!!!
பதுங்கு குழிகள்….
கண்டாலே – என்
நெஞ்சுக்குழி அடைத்து நிற்கும்…. -ஏன்?
இங்கு தானே
எத்தனை ஆயிரம்
எம் சகோதர உறவுகள்
தொலைந்தன.. புதைந்தன…
எத்தனை உயிர்களைத்
தின்று தீர்த்தனர்….!!

தாயற்ற சிசுக்கள்
பசியால் மட்டும் வாடவில்லை…
அறுந்து தொலைந்த தாயுறவால்
இன்னமும் வாடிக்கொண்டிருக்கின்றன…
தாய்மாரைத்
தேடிக் கொண்டிருக்கின்றன……
அன்று…
தெறித்துப் பறந்த
குருதி எல்லாம்
முள்ளி மண்ணில் – இன்று
துடைத்து எறிந்தாலும்
மறைக்கப்பட்டாலும்….
மறுக்கப்பட்டாலும்….
புதைந்து இருக்கும்
ஒவ்வொருவர் உறவுகளும்
வலிகளைச் சொல்லும்….
உண்மையை
உரத்துச் சொல்லும்…!!

இழந்து போன – எம்
உறவுச் செல்வங்களே….!!
உம்மை நாம்..
மறந்து போவோமா?
அந்த மண்ணில்
வலி பெற்று
வடு மறைந்த போதும்
நினைவு மறக்காது…
உமக்காக பிரார்த்திக்கிறேன்…
உறவுகளே….!!
உங்கள் ஆத்மா
சாந்தி கொள்ளட்டும்….!!

  • ஜெ. செந்துஜா
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )