நான் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

நான் நிச்சயம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

எதிர்க்கட்சித் தலைவராக நான் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்.நான் மரணத்திற்கு பயப்படும் கோழை அல்ல.எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டில் விவசாயத்திற்கு விடியல் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா திட்டத்திற்குச் சொந்தமான தெற்கு கால்வாயை புனரமைக்கும் பணியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

அரசாங்கப் பிரதிநிதிகளின் குழு ஒன்று கோயபல்ஸின் ஊடகக் கொள்கையை முன்வைத்து ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிட மாட்டார் என்ற போலிச் செய்தியை கட்டமைத்து வருகின்றனர் .நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது கோத்த பாயவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு என்னைத் தோற்கடிக்க முயற்சித்தவர்களே இவ்வாறான அறிக்கைகளை கூறிவருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக நான் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதே இவர்களுக்குக் கூறக்கூடிய பதில். நான் மரணத்திற்கு பயப்படும் கோழை அல்ல.எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன் ,ராஜபக்சவுடன் நான் ஒருபோதும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )