கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம்; யாரும் உரிமை கோர முடியாது

கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம்; யாரும் உரிமை கோர முடியாது

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றால் கொழும்பு சிங்களவர்களின் தலைநகரம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை சிங்கள பௌத்த நாடு. இந்த நாட்டில் எந்த இடத்தையும் தமிழர்களுக்குச் சொந்தம் என்று தமிழ் அரசியல்வாதிகள் உரிமை கோர முடியாது.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல. அங்கு மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில், மூவின மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றார்கள். இதனால் தெற்கிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

வடக்கு – கிழக்கில் விகாரைகளை நிறுவுதல் பௌத்த மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டமை இந்து மயமாக்கலா?

வடக்கு – கிழக்கில் சிங்களவர்கள் குடியேறுதல் சிங்கள மயமாக்கல் எனில் தெற்கில் – கொழும்பில் தமிழர்கள் குடியமர்ந்துள்ளமை தமிழர் மயமாக்கலா? தமிழ் அரசியல்வாதிகள் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )