பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.இல் போட்டியிடவுள்ளதாக தகவல்

பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் பொதுத் தேர்தலில் ஐ.தே.க.இல் போட்டியிடவுள்ளதாக தகவல்

அமைச்சுப் பதவியினை வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளம் அமைச்சர்கள் குழுவொன்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிருவதற்கு ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த குழுவினர் ஜனாதிபதி ராணிக் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இந்த நிலையில், ஜனாதிபதி அவர்களின் அமைச்சு பொறுப்புகளை முன்னெடுப்பதற்கு கூடுதல் பொறுப்புகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளம் அமைச்சர்கள் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தில் கைகோர்த்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக குறித்த இளம் அமைச்சர்கள் குழு காட்சி நடவடிக்கைகளை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )