சர்வமதத் தலைவர்களை சிறைப் பிடித்தோரை கைது செய்யாதது ஏன்?

சர்வமதத் தலைவர்களை சிறைப் பிடித்தோரை கைது செய்யாதது ஏன்?

மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதிக்கு காட்டு வழியாக சென்றவர்கள் அப்பகுதியை கெமரா,செல்போன்கள் மூலம் படம்பிடித்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் தான் அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பினர் அவர்களை தடுத்து வைத்துள்ளார்கள். எனினும் அந்த பிரச்சினை மிகவும் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாகவே நான் அறிந்து கொண்டேன் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதி பண்ணையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக அவ்விடத்துக்குச் சென்ற சர்வமத தலைவர்கள் அடங்கிய குழுவினரை அங்குள்ள ஒருதரப்பினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் தடுத்து வைத்துள்ளார்கள். இந்து மத குரு மீது தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் 4 மணிநேரமாக பொலிஸார் அவ்விடத்துக்கு செல்லவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என டம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பதிலளிக்கையில்,

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு ஒரு தரப்பினர் காட்டு வழியாக அனுமதியற்ற வகையில் சென்றுள்ளார்கள்.அவர்கள் அப்பகுதியை கெமரா மற்றும் செல்போன்கள் ஊடாகபடம் பிடித்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில் தான் அப்பகுதியிலுள்ள ஒரு தரப்பினர் இவர்களை தடுத்து வைத்துள்ளார்கள்.சர்வமத தலைவர்கள் அடங்கிய குழுவினர் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு 14 கிலோமீற்றர் தூர இடைவெளியுள்ளதுஇதனால்தான் பொலிஸார் அங்கு செல்ல காலதாமதமானது.எனினும் .இச்சம்பவத்தை அறிந்தவுடன் பொலிஸார் அவ்விடத்துக்கு சென்று,நிலைமையை சுமூக நிலைக்கு கொண்டு வந்ததாக்க நான் அறிந்து கொண்டேன். .அங்கு பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை என வணபிதா ஒருவரும் பிக்கு ஒருவரும் கூறினார்கள். இந்த சம்பவம் குறித்து நான் அறிக்கை பெற்றுள்ளேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )