‘தமிழர் பிரச்சினைகள்’ குறித்து இலங்கை அக்கறை கொள்ளாது!

‘தமிழர் பிரச்சினைகள்’ குறித்து இலங்கை அக்கறை கொள்ளாது!

இலங்கையின் ஏனைய விடயங்களில் புதுடில்லியைச் சார்ந்திருந்தாலும் டில்லியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களோ அல்லது கூட்டறிக்கையோஇந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையில் அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு கொண்டு வருவதை இனியும் வரவேற்க முடியாது என்பது போன்ற முக்கியமான பிரச்சினைகளைக் குறிப்பிடவில்லை என்பது சந்திப்பின் பெரிய செய்தியாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டும்’ இந்து ‘ பத்திரிகை, ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான குடும்பப் பிணைப்புகளைப் பொருட்படுத்தாமல், வரலாறு கடந்த காலங்களில் உறவுகளை முறித்துள்ளதெனவும் மேலும் இந்த பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வு இல்லாத எதிர்காலத்திற்கான எந்தவொரு தொலை நோக்கும் முழுமையற்றதாகவே கருதப்படுமெனவும் இடித்துரைத்துள்ளது

‘இந்தியா- இலங்கை உறவுகளும் அவர்களின் தொலை நோக்கும் இன்னும் முழுமையடையவில்லை’ என்று மகுடமிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்திருப்பதாவது;

பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய கூட்டறிக்கையுடன், இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளுக்கான தொலைநோக்கை கோடிட்டுக் காட்டியுள்ளன .. கடந்த வாரம் டி ல்லியில் பிரதமர் நரேந்திர மோடி க்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப்பின்பு வெளியிடப்பட்ட “இணைப்பை ஊக்குவித்தல், செழுமைக்கு ஊக்குவிப்பு: இந்தியா-இலங்கை பொருளாதார பங்குடமை தொலைநோக்கு” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை, கடல், வானம் , எரிசக்தி, வர்த்தகம் மற்றும் மக்களுக்கான முன்முயற்சிகள் ஆகிய ஐந்து துறைகளில் பார்வையை முன்வைக்கிறது. கடல் மற்றும் விமானவழி இணைப்பில் புதிய முதலீடுகள் இலங்கையில் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை மேம்படுத்துதல், படகு சேவைகளை மீண்டும் தொடங்குதல் மற்றும் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையில் விமான கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். எரிசக்தி இணைப்பில் பாரியதொரு எழுச்சியாக காற்று மற்றும் சூரிய மின் நிலையங்களைஇலங்கையில்மீளப் புதுப்பிக்கத்தக்க சக்திவளமாக அபிவிருத்தி செய்வதையும் உள்ளடக்கும். இருசாரா ரும் வர்த்தகத்தை அதிகரிக்கவும், கடந்த ஆண்டு வீழ் ச்சியடைந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கான இந்திய ஆதரவைத் தொடரவும், அதன் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை மெதுவாகச் செயற் படுத்தவுமான எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர் .

இலங்கையில் யூ பி ஐ [யூ பி ஐ என்பது ஒருங்கிணைந்த கட்டண இணைப்பை குறிக்கிறது. ஒரே ஒரு பயன்பாட்டின் மூலம் வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணத்தை மாற்ற இது பயன்படுகிறது. இதன் பொருள், நீங்கள் பணத்தை அனுப்பலாம் மற்றும் பெறலாம், கட்டணங்களை செலுத்தலாம் மற்றும் ஒரு இடைமுகத்தில் ஒரே கட்டத்தில் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கலாம், இதன் மூலம் முழுஇணையவழி பரிவர்த்தனை செயல்முறையையும் எளிதாக்கலாம்]. டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயற்படுத்துவதற்கும் இந்திய ரூபாயை வர்த்தகத்திற்கான நாணயமாக நியமிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சுற்றுலா மற்றும் கலாசார மற்றும் மதரீதியான பயணங்கள் மற்றும் கல்விக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும் அவர்கள் இணங்கிக்கொண்டனர்

தொலைநோக்கு அறிக்கையானது எதிர்காலத்திற்கான ஒரு விரிவான திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அதில் தேவையானதொன்றை கொண்டிராதது வெளிப்படையானது: விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வஎழுத்துமூல ஆவணங்கள் எதுவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான 13 வது திருத்தத்திற்கு மதிப்பளித்தல்மற்றும் நீண்டகாலமாக நிலுவையாக இருந்துவரும் இந்திய மீனவர்கள் கைது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றிய இலங்கையின் முன்னைய உறுதிமொழிகளை ஒப்புக் கொள்ளவில்லை. அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துதல் ஆகியவற்றுக்கான கடுமையான வேண்டுகோளை விடுப்பது மோடியிடம் விடப்பட்டது, மேலும் அவர் இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு “மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை” உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொழும்பில், ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை வழங்கும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன , நீண்ட காலமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பதற் ற ங்களுக்குக் காரணமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாடுவதற்கான “தேர்தல்ரீதியான ஆணை” அவரது அரசாங்கத்திற்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியது.

இலங்கையின் ஏனைய விடயங்களில் புதுடில்லியைச் சார்ந்திருந்தாலும் டி ல்லியில் விக்கிரமசிங்கவின் கருத்துக்களோ அல்லது கூட்டறிக்கையோஇந்திய அரசாங்கம் தமிழர் பிரச்சினையில் அதன் வரலாற்று அக்கறைகளை இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு கொண்டு வருவதை இனி வரவேற்க முடியாதுஎன்ற இ த்தகைய முக்கியமான பிரச்சினைகளைக் குறிப்பிடவில்லை என்பது சந்திப்பின் பெரிய செய்தியாக இருக்கலாம் ஆனால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான குடும்பப் பிணைப்புகளைப் பொருட்படுத்தாமல், வரலாறு கடந்த காலங்களில் உறவுகளை முறித்துள்ளது, மேலும் இந்த பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வு இல்லாத எதிர்காலத்திற்கான எந்தவொருதொலைநோக்கும் முழுமையற்றதாகவே கருதப்படும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )