பொதுச் சுகாதாரத் துறைக்கு வீழ்ச்சி தனியார் வைத்தியசாலைகளுக்கு வாய்ப்பு

பொதுச் சுகாதாரத் துறைக்கு வீழ்ச்சி தனியார் வைத்தியசாலைகளுக்கு வாய்ப்பு

பொது சுகாதார துறையை வீழ்ச்சியடைய சுகாதார அமைச்சர் இடமளிப்பது தனியார் வைத்தியசாலைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காவும் இருக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பிரச்சினைகள் தொடர்பான சர்ச்சையின் போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் சில வைத்தியசாலைகளில் மின்கட்டணம் செலுத்தவில்லை என்று மின்சாரத்தை துண்டித்துள்ளனர். நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பில் ஒருபுறம் மருந்து பிரச்சினை மறுபுரம் மின்சார துண்டிப்பு பிரச்சினை காணப்படுகின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் தனியார் வைத்தியசாலைகளுக்கே வாய்ப்பாக அமையும். இவ்வாறான வீழ்ச்சிகளை தெரிந்தோ தெரியாமலோ நடப்பதற்கு சுகாதார அமைச்சர் இடமளிப்பது, தனியார் வைத்தியசாலைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதற்காகவும் இருக்கலாம்.

மிகிந்தலையில் பழமையான வைத்தியசாலைகள் இருந்த அடையாளம் உள்ளது. இவ்வாறான புராதன சுகாதார துறை இருந்த நாடாக இலங்கை இருந்துள்ளது. இப்படி இருந்த நாட்டில் பொது சுகாதார துறைக்கு பாதிப்புகளை ஏற்படுத்த இடமளித்துவிட வேண்டாம் என்று கோருகின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )