வட, கிழக்கு இணைப்பு கிடையாது; நான் ரணில் விக்ரமசிங்க, ரணில் ராஜபக்ஸ அல்ல

வட, கிழக்கு இணைப்பு கிடையாது; நான் ரணில் விக்ரமசிங்க, ரணில் ராஜபக்ஸ அல்ல

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அது குறித்த கலந்துரையாடல்களோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்திருக்கலாம். ஆனால் நான் ரணில் விக்ரமசிங்க. ரணில் ராஜபக்ஸ அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் எம்.பி.க்களுடன் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை நாம் தற்பொழுது முன்வைத்துள்ளோம். அதனை முன்னெடுத்துச் செல்வதா

இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும்.இதற்கு பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை தேவை.

அதேவேளை எந்த விதத்திலும் வடக்கு, கிழக்கை இணைப்பதற்கான ஏற்பாடோ அது குறித்த கலந்துரையாடல்களோ அரசாங்கம் மேற்கொள்ளவில்லை . அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக சுமந்திரன் எம்.பி.தெரிவித்தார். நான் ரணில் விக்ரமசிங்க. ரணில்ராஜபக்ஸ அல்ல.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு நான் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை .அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கில் நீதி நிலைநாட்டும் செயற்பாடுகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. அவசியம் ஏற்படும் பட்சத்தில் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு அமைய வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் .

காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற 21,374 முறைப்பாடுகளில் இதுவரை

3,462 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன. ஏனைய முறைப்பாடுகள்தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு, காணாமல் போனோர் தொடர்பிலான

முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால் அது தொடர்பில் அவர்களிடத்திலுள்ள தகவல்களை

உண்மையை கண்டறிவதற்கான இடைக்கால பொறிமுறைக்கான செயலகத்திற்கு வழங்குங்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )