
சர்வதேசத்தின் முன் முட்டாள் முடிவுகளை எடுக்காதீர்கள்
தங்கள் சொந்த எண்ணங்களின் பிரகாரம் அவசரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில்,நாட்டிற்கு நடந்த அழிவுகள் கண்ணெதிரே தெரிவதாகவும்,இப்போதாவது முட்டாள்தனமான முடிவுகள் எடுக்காமல், எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி, எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையுமாறும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று திங்கட்கிழமை கூடிய எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மேலும் கூறுகையில்,
சரியானதற்கு சரி என்று கூறினாலும் தவறானவற்றுக்கு உடன்படப்போவதில்லை. தாம் எடுத்த முட்டாள்தனமான முடிவுகளைஅவ்வாறே ஒப்புக் கொண்டு,புதிய வழியில் முன்னோக்கிச் செல்ல ஒன்றுபடுமாறு அரசாங்கம் சொல்வதெற்கெல்லாம் கை தூக்கத் தயாராக இல்லை
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்துடன் தொடர்பான தரவுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியால் அப்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அவர் அதனை வழங்கவில்லை .ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தால்,சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் மக்கள் தரப்பில் வலுப்படுத்தி முற்போக்காக செயல்படுத்தும் சாத்தியம் இருந்தும்,அது நடக்கவில்லை எனவும்,இந்த தரவுகள் நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியும் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதை ஏற்றுக்கொண்டாலும்,இந்த உடன்படிக்கைகளை வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் நடைமுறைப்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி நம்பினாலும்,மத்திய வங்கியின் ஆளுநரும், நிதி இராஜாங்க அமைச்சரும் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கப் போவதில்லை எனத் தெரிவித்திருந்த போதிலும்,உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதாக ஜனாதிபதி கூறியமை ஆச்சரியமளிக்கின்றது.
ஒரு நேரத்தில் ஒரு விடயத்தையும் மற்றொரு நேரத்தில் இன்னொரு விடயத்தையும் கூறி ஒன்றுக்கொன்று பரஸ்பர முரண்பாடான கருத்துக்களை கூறுவதில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையும் அற்றுப்போகிறது. ,உலகின் பெரும்பாலான நாடுகள் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாது சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களுக்குச் செல்லலாம் என்பதிலும் இலங்கையால் இவ்வாறானதொரு ஒப்பந்தத்திற்குச் செல்ல முடியாது என்பதற்குமிடையில் ஏதே மறைந்துள்ளது.
இந்த உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அரசாங்கம் மக்களைப் பற்றியோ அல்லது பொதுநல வைப்புத்தொகைகள் மற்றும் பணிக்கொடை வைப்புத் தொகைகள் பற்றியோ சிந்திக்கவில்லை.எனவே முற்போக்கான எதிர்க்கட்சியாக இவ்வாறான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

