
வட,கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சி
வடக்குக், கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தோன்றுகிறது. இதனை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் என
முன்னாள் இராணுவ தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இராணுவம் கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிக்க வேண்டும். வடக்குக், கிழக்கு மாகாணங்களில் யுத்தக் காலத்தில் இராணுவத் தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இடங்களை தெரிவு செய்து அவற்றை மீள கையளிக்க வேண்டும்.
வடக்குக், கிழக்குப் பகுதிகளில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு இராணுவம் தேவை. இராணுவத்துக்கு இராணுவ முகாம்கள் அவசியம். அதுபோல இலங்கை முழுவதிலும் இராணுவத்தினர் இருக்க வேண்டும் .
ஆனால் தேர்தலில் வடக்குக், கிழக்குத் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தோன்றுகிறது. இதனை முழுமையாக எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

