பெரமுன கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும்

பெரமுன கூட்டணியே ஆட்சியை கைப்பற்றும்

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். ராஜபக்சக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணையில் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ச எம்.பி தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸ பதவி விலகிய பின்னர் அரசியலமைப்பு ஊடாக ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

கோத்தபாய ராஜபக்ஸ வுக்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை,மஹிந்தராஜபக்ஸவுக்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை ஆகியவற்றுக்கு அமையவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதை மறக்க வேண்டாம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )