ரணில் அழைத்த கூட்டத்தில் மஹிந்த, பசில் பங்கேற்பு

ரணில் அழைத்த கூட்டத்தில் மஹிந்த, பசில் பங்கேற்பு

ஜனாதிபதி தலைமையில், நேற்று மாலை இடம்பெறவிருந்த ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய பிரதமரால் அழைக்கப்பட்ட இந்தக் கூட்டம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவிருந்தது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் பங்கேற்க இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சமகால அரசியல் நிலைவரம், உட்பட, ஆளுந்தரப்பு அரசியலில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை நடந்த அமைச்சர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவர்கள் தவிர்த்துள்ளனர்.

இந்தச் சந்திப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் பொதுஜன பெரமுன தலைவர்கள் உட்பட மாவட்ட தலைவர்கள் எவரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்காத நிலையில் நேற்றைய கூட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைவர்களுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அவர்கள் இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )