ஜனாதிபதி தனித்துச் செயற்பட்டால் அவரைப் பின்தொடர மாட்டோம்

ஜனாதிபதி தனித்துச் செயற்பட்டால் அவரைப் பின்தொடர மாட்டோம்

எமது பாதுகாப்புக்காக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின்தொடர மாட்டோம் என நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

புத்தளத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தான் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அச்சமில்லாமல் வீதியில் செல்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறுவதனை ஏற்க முடியாது .விடுதலைப்புலிகளுடனான யுத்தகாலத்திலும், நாங்கள் தைரியமாக வீதியில் நடமாடினோம்.போராட்டக்களத்தில் இருந்த போதைப்பொருள் அடிமையாளர்களுக்கு நாங்கள் அச்சமடைய போவதில்லை.

எமது பாதுகாப்புக்காக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கவில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மை விட்டு தனித்து செயற்பட்டால் நாங்கள் அவரை பின் தொடர்ந்து செல்ல போவதில்லை.அரசாங்கத்தின் கொள்கைகளை செயற்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை முக்கியமானது என்பதை சகலரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )