
பழகிக் கொள்வோம்!
துளித் துளியாய்
விழுகின்ற
மழை நீரை
சேமிக்கும் சமுத்திரம் போல்…
கார்காலம்
வரும் என்று
முன்னமே கணித்து..
களைப்பில்லாமல்
சேமிக்கும் எறும்புகளை போல…
பூஞ்சோலைக்குள்
இசைத்துக் கொண்டு
தேனை சேகரிக்கும்
தேனீக்களைப் போல…
நாமும் சேமிப்போம்!!
தலையெல்லாம்
நரை விழுந்து…
மேனியல்லாம் தளர்ந்து…
தள்ளாடி விழும் பொழுது,
தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோலாய்..!
காற்றில் ஆடும்
கொடியை
கரம் பிடிக்கும் கிளையாய்….!
சாய்ந்து கொள்ள
ஒரு தோளாய்…
இளைப்பாற ஒரு நிழலாய்…!
வரும் வழி
பெரியதாக இருக்கத்
தேவையே இல்லை!!
செலவுப் பாதையை
சிறிதாக்குவோம்…!
சிறுவாட்டுக் காசிருந்தால்…
முதுமை
ஒன்றும் பயமில்லை.
-முல்லை பாஸ்கர்
CATEGORIES இலக்கியம்